புதிய இலவச நூலகம் & படிப்பகம் திறப்பு
3,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன், காலை 7 முதல் இரவு 9 வரை திறந்திருக்கும் இலவசப் படிப்பகம் மேலூரில் திறக்கப்பட்டது.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அமைதியான படிப்பு இடம் தேவை என்ற கோரிக்கையை ஏற்று, அறக்கட்டளை அலுவலகத்தின் முதல் தளத்தில் இலவச நூலகம் & படிப்பகம் திறக்கப்பட்டுள்ளது.
என்னென்ன வசதிகள்?
- TNPSC, வங்கி, ரயில்வே தேர்வுகளுக்கான 3,000+ புத்தகங்கள்
- தமிழ் & ஆங்கில நாளிதழ்கள், மாதாந்திர நடப்பு நிகழ்வு இதழ்கள்
- 60 இருக்கைகள், மின்விசிறி, குடிநீர், இலவச Wi-Fi
நூலகம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும் திறந்திருக்கும். உறுப்பினர் சேர்க்கை முற்றிலும் இலவசம் — ஆதார் நகல் மட்டும் போதும்.
பழைய போட்டித் தேர்வுப் புத்தகங்களை நன்கொடையாக வழங்க விரும்புவோர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.



கருத்துகள் (0)