திருவாதவூரில் புதிய கிராம மாலை வகுப்பு மையம் தொடக்கம்
எங்கள் 18 ஆவது மாலை நேரக் கல்வி மையம் திருவாதவூரில் தொடங்கப்பட்டது. முதல் வாரத்திலேயே 42 குழந்தைகள் சேர்ந்தனர்.

ஊர்த் தலைவர், பெற்றோர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் திருவாதவூர் சமுதாயக் கூடத்தில் எங்கள் 18 ஆவது மாலை நேரக் கல்வி மையம் தொடங்கப்பட்டது.
மாலை 5 முதல் 7 மணி வரை, 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாட உதவி வழங்கப்படும். அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பட்டதாரி இளைஞர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல் வாரத்திலேயே 42 குழந்தைகள் சேர்ந்தனர். புத்தகங்கள், எழுதுபொருட்கள், மாலைச் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகின்றன.



கருத்துகள் (0)