கிராமத்திலிருந்து அரசுப் பணி வரை — ஒரு மாணவியின் பயணம்
தினமும் 12 கி.மீ. பேருந்தில் பயணம் செய்து பயிற்சிக்கு வந்த தமிழ்செல்வி, இன்று தன் கிராமத்திற்கே கிராம நிர்வாக அலுவலர்.

கொட்டாம்பட்டி அருகே ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வியின் தந்தை தினக்கூலித் தொழிலாளி. பட்டப்படிப்பு முடித்ததும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.
2018 இல் அறக்கட்டளையின் இலவசப் பயிற்சி பற்றி அறிந்து, தினமும் 12 கி.மீ. பேருந்தில் பயணம் செய்து வகுப்புகளுக்கு வந்தார். வாராந்திர மாதிரித் தேர்வுகளில் தொடர்ந்து முதல் 10 இடங்களுக்குள் வந்தார்.
மதிப்பெண் குறைந்த வாரங்களில் பயிற்றுநர்கள் தனியாக அழைத்துப் பேசுவார்கள். அந்த நம்பிக்கை தான் என்னைக் கைவிடாமல் வைத்தது.
— ரா. தமிழ்செல்வி
2019 குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, இன்று தன் சொந்தக் கிராமத்திற்கே கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றுகிறார். வார இறுதிகளில் புதிய மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் வருகிறார்.



கருத்துகள் (0)