டிரஸ்டின் வரலாறு & நோக்கம்
Our Story & Mission

HOW IT BEGAN
ஒரு சிறிய அறையில், 22 மாணவர்களுடன் தொடங்கியது
திறமையான பல மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பைப் பாதியில் நிறுத்துவதைப் பார்த்த வேதனையே முத்தரசி கல்வி அறக்கட்டளையின் தொடக்கம். ஒரு சிறிய அறை, சில புத்தகங்கள், சனி-ஞாயிறு வகுப்புகள் — இப்படித்தான் பயணம் ஆரம்பித்தது.
முதல் பேட்ச் மாணவர்கள் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு, அவர்களே அடுத்த தலைமுறைக்குப் பாடம் எடுக்கத் திரும்பி வந்தார்கள். அந்தச் சங்கிலிதான் இன்றும் எங்களை இயக்குகிறது.
“ஒரு குழந்தைக்குக் கல்வி கொடுத்தால், ஒரு தலைமுறையே மாறும்.”
VISION · நோக்கு
பொருளாதாரம் ஒரு தடையாக இல்லாத, அனைவருக்குமான தரமான கல்வி.
MISSION · பணி
- இலவச / குறைந்த கட்டணப் போட்டித் தேர்வுப் பயிற்சி
- தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகை
- கிராமப்புற மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வி அணுகல்
- பெண் கல்வி மற்றும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை
MILESTONES
எங்கள் பயணத்தின் மைல்கற்கள்
- 2014டிரஸ்ட் பதிவுமேலூரில் ஒரு அறையில் 22 மாணவர்களுடன் வார இறுதி வகுப்புகள் தொடக்கம்.
- 201612A & 80G அங்கீகாரம்நன்கொடையாளர்களுக்கு வரி விலக்கு; முதல் உதவித்தொகைத் திட்டம் தொடக்கம்.
- 2018முதல் அரசுப் பணி வெற்றியாளர்கள்குரூப் 4 தேர்வில் 14 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்தனர்.
- 2023இலவச நூலகம் & கணினி ஆய்வகம்3,000+ புத்தகங்கள், 20 கணினிகள் — தினமும் 150+ மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.