Role Model

கல்வியைச் சுமந்த ஒரு கணக்கரின் கதை

Administrator · 1 நிமிட வாசிப்பு

திரு.சு.சுடலை (1945 - 2019) - மதுரா கோட்ஸ் பஞ்சாலையின் கணக்கர், எங்கள் வாழ்வின் கணக்கு.

1945-ஆம் ஆண்டு, எந்தவித கல்விப் பின்புலமும் இல்லாத ஒரு எளிய குடும்பத்தில் மகனாகப் பிறந்தவர். அவரது தந்தைக்குக் கல்வியின் அருமை தெரியவில்லை. மகன் ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருக்கும் இலக்கிய நூல்களைக் கூட எடைக்குப் போட்டுவிடுவாராம். ஆனால், கல்வியறிவு இல்லாத அவரது தாய்க்கு மட்டும், தன் மகன் படிக்க வேண்டும் என்று ஒரு கனவு இருந்தது. அந்தத் தாயின் கனவை நனவாக்க, சிறு வயதிலேயே சின்னச் சின்ன வேலைகள் செய்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், தந்தைக்குத் தெரியாமல் புத்தகங்கள் வாங்கி, வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் படித்தார். சாதாரண மில் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து, மதுரையில் புகழ்பெற்ற மதுரா கோட்ஸ் பஞ்சாலையில் கணக்கராகப் பணியாற்றியபோதும், படிப்பை நிறுத்தவில்லை. தொழிலாளியாக இருந்துகொண்டே, அஞ்சல்வழியில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

"கல்வியே வாழ்க்கைக்கு எல்லாம் தரும்" - இது அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பாடம் அல்ல, வாழ்ந்து காட்டிய வாழ்க்கை.தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளைகள் படக்கூடாது என்பதற்காக, எங்கள் அனைவரையும் நன்கு படிக்க வைத்தார். அவர் ஏற்றி வைத்த அந்தக் கல்வி விளக்கு தான் இன்று முத்தரசி கல்வி அறக்கட்டளையாக ஒளிர்கிறது.அவரது நினைவாகவும், அவர் காட்டிய வழியிலும் இந்த அறக்கட்டளை தொடரும்.

 

கருத்துகள் (0)

உங்கள் கருத்தைப் பகிருங்கள்