கிராமப்புறம் · RURAL

மாலை நேரக் கல்வி மையங்கள்

பள்ளி முடிந்த பின் வீட்டில் படிக்க வசதியில்லாத கிராமக் குழந்தைகளுக்கு, ஊருக்குள்ளேயே பாதுகாப்பான படிப்பு இடம்.

நடைபெறுகிறது
கிராம மாலை நேர வகுப்பில் படிக்கும் குழந்தைகள்
பயனாளிகள்
600 குழந்தைகள்
இடம்
18 கிராமங்கள்
தொடங்கியது
2017
  • 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாட உதவி
  • உள்ளூர் படித்த இளைஞர்களே ஆசிரியர்கள்
  • மாதாந்திரப் பெற்றோர் சந்திப்பு

பள்ளி முடிந்த பின் வீட்டில் மின்விளக்கும் அமைதியான இடமும் இல்லாத குழந்தைகளுக்காக, ஊருக்குள்ளேயே மாலை 5 முதல் 7 மணி வரை படிப்பு மையங்களை நடத்துகிறோம்.

ஒரு நாள் எப்படி இருக்கும்?

  • 5:00 — சிற்றுண்டி, வருகைப் பதிவு
  • 5:15 — வீட்டுப்பாடம், பாட உதவி
  • 6:15 — வாசிப்பு / கணித விளையாட்டுகள்
  • 6:45 — அடுத்த நாளுக்கான தயாரிப்பு

ஒவ்வொரு மையத்திலும் அதே ஊரைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் இருவர் ஆசிரியர்களாக உள்ளனர் — அவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மாதம் ஒருமுறை பெற்றோர் சந்திப்பு நடைபெறும்.

ஒரு மையத்தை ஓராண்டு நடத்த சுமார் ₹1.2 லட்சம் செலவாகிறது. ஒரு கிராமத்தை முழுமையாக ஸ்பான்சர் செய்ய விரும்பினால் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

புகைப்படங்கள்