டிஜிட்டல் · DIGITAL
டிஜிட்டல் கற்றல் ஆய்வகம்
கணினி அறிவும் இணைய வசதியும் இல்லாமல் எந்த மாணவரும் பின்தங்கக் கூடாது — அதற்கான ஒரு பொது ஆய்வகம். இரண்டாவது ஆய்வகத்திற்கு நிதி திரட்டப்படுகிறது.
நிதி திரட்டப்படுகிறது
- பயனாளிகள்
- 150 மாணவர்கள்
- இடம்
- மேலூர்
- தொடங்கியது
- 2023
- அடிப்படைக் கணினி & இணையப் பயிற்சி
- ஆன்லைன் விண்ணப்பம், தேர்வுப் பதிவு உதவி
- இலவச இணைய வசதியுடன் படிப்பு நேரம்
அரசு வேலை விண்ணப்பங்கள் முதல் உதவித்தொகை வரை எல்லாமே இன்று ஆன்லைனில். கணினி அறிவு இல்லாததால் எந்த மாணவரும் பின்தங்கக் கூடாது என்பதற்காக 2023 இல் 20 கணினிகளுடன் இந்த ஆய்வகத்தைத் தொடங்கினோம்.
பயிற்சிகள்
- அடிப்படைக் கணினி, தமிழ் / ஆங்கிலத் தட்டச்சு
- மின்னஞ்சல், இணையத் தேடல், டிஜிட்டல் பாதுகாப்பு
- ஆன்லைன் தேர்வுப் பதிவு, உதவித்தொகை விண்ணப்ப உதவி
அடுத்த இலக்கு
திருவாதவூரில் இரண்டாவது ஆய்வகம் அமைக்க ₹6 லட்சம் தேவை — 15 கணினிகள், இணைய இணைப்பு, சோலார் மின் வசதி. CSR கூட்டாண்மைக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.


